திருமண நட்சத்திர பொருத்தம் . Thirumana porutham

ஏன் திருமணத்திற்கு நட்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும்?

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் புரிதலுடனும் அக்கரையுடனும் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் வாழத்தான் விரும்புவார்கள்.

அப்படி வாழ ஆண் பெண் இருவரின் நட்சத்திர அமைப்புகளை வைத்து அவர்களது இல்லற வாழ்க்கை, தாம்பத்ய வாழ்க்கை, இருவருக்குள் உள்ள புரிதல் அவர்களது குடும்ப விருத்தி, ஆயுட்காலம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள பொருத்தம் (Thirumana porutham) அவசியம்.

திருமண பொருத்தம் | thirumana porutham | marriage match

திருமண பொருத்தம் (Thirumana porutham) பார்க்க மணமகள் மற்றும் மனமகனின் நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கவும்

மணப்பெண் நட்சத்திரம்

மணமகன் நட்சத்திரம்

சோதிட பொருத்தம் (Thirumana porutham) முடிவுகளில், தினப்பொருத்தம், கணப்பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜிப்பொருத்தம், வேதைப்பொருத்தம், ஆகிய பத்து பொருத்தங்களை பற்றியும் இலவசமாக தெரிந்து கொள்ளலாம்

1. தினப்பொருத்தம்

மணமகன் மற்றும் மணமகளின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கும்

அவர்களுக்குள் தினமும் சண்டைகள் வராமல் அன்பு பகிர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் அவசியமாகும்

மேலும் தினம் என்றால் நட்சத்திரம் என்ற பொருள் உண்டு. இந்த பொருத்தத்தை நட்சத்திர பொருத்தம் என்றும் கூறுவர்

2. கணப்பொருத்தம்

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா என்பதையும் மற்றும் அடிப்படை குணங்களில் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்துகொள்வதைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

கணம் மூன்று வகைப்படும். தெய்வ கணம்,மனித கணம், மற்றும் ராட்சத கணம்.

மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களும் இந்த மூன்று கணத்தில் ஒரு கணத்திற்கு 9 நட்சத்திரங்கள் வீதம் அடங்கிவிடும்

4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

திருமணமாகும் பெண்கள் வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவே பெரும்பாலானோர் விரும்புவார்கள்.

ஆகையால் தான் தீர்க்க சுமங்கலியாய் இருக்க இந்த பொருத்தம் பார்க்க படுகிறது

மேலும் பொருள் செல்வ சொல்வாக்கினை தருவது ஆகும்.

திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க ஸ்த்ரி தீர்க்க பொருத்தம் உதவுகிறது.

மேலும் பெண்ணின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தினை ஆணின் நட்சத்திரம் வைத்து எப்படி மாறுபடுகிறது என்பதை பொருத்து பார்க்கபடுகிறது.

3. மகேந்திரப்பொருத்தம்

திருமண வாழ்க்கையின் முக்கிய கட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுவே மகேந்திர பொருத்தமாகும்

புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய மகேந்திர பொருத்தம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

குழந்தை பாக்கியம் ஆயுள் விருத்தி சௌபாக்கியம் போன்றவற்றை தருவதாகும்.

5. யோனி பொருத்தம்

யோனிப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் இருவரும் தாம்பத்திய உறவில் நீடித்த தன்மையும் மன நிறைவும் நிறைந்த சுகமும் இருக்கும்.

நமது ஜோதிட சாஸ்திரங்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு.

அதன் அடிப்படையில் இந்த பொருத்தமானது பார்க்கபடுகிறது.

ஆண் பெண் நட்சத்திரங்களுக்கு இடையே பகை மிருகங்கள் இல்லாமல் இருந்தால் அது நல்ல பொருத்தமாகும்

6. ராசி பொருத்தம்

ஆண் பெண் குடும்பத்திற்குள் நல்ல உறவு நீடிப்பதற்கும். தம்பதிகள் இருவரும் புரிந்து வாழ்வதற்கும் ராசி பொருத்தம் பார்க்கபடுகிறது.

பெண் பிறந்த ராசியை வைத்தும் ஆண் பிறந்த ராசியை வைத்தும் இந்த பொருத்தம் பார்க்க படுகிறது

7. ராசி அதிபதி பொருத்தம்

வாழையடி வாழையாய் வம்சமும் வளர வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவார்கள் அப்படி வம்சம் விருத்தி அடைய ராசி அதிபதி பொருத்தம் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ராசிக்குமான கிரக நிலையை வைத்து அதன் நட்பு கிரகம், சம கிரகம், பகை கிரகங்களை ஆராய்ந்து இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது

8. வசிய பொருத்தம்

வசிய பொருத்தமானது திருமண தம்பதிகளின் வாழ்க்கையில் இருவரும் வாழ்க்கை முழுக்க இணக்கமாகவும் அன்போடும் இருப்பார்களா என்பதற்கும்

இருவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இல்லாமல் நிம்மதியோடு வாழ்வதற்கும் இந்த பொருத்தம் அவசியமாகும்

இந்த பொருத்தமானது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற வசிய ராசிக்கு மட்டுமே பொருந்தும்

9. ரஜ்ஜிப்பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம் பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. மணமக்களுக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்றால் அது அவர்களுக்கு ஆபத்தானதாகும். அதனால் ரஜ்ஜு பொருத்தம் மிகவும் அவசியமானதாகும்.

சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, ஊரு ரஜ்ஜு, பாத ரஜ்ஜு என ஐந்து ரஜ்ஜுக்கள் உள்ளன

ஆண் மற்றும் பெண் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் செய்தால் இருவரும் நலமோடு வாழ்வார்கள்

10. வேதைப்பொருத்தம்

வேதைப்பொருத்தமானது திருமண தம்பதிகள் வேதனையில்லாத வாழ்க்கை அமையுமா என்பதை பார்க்கும் பொருத்தமாகும். வேதை பொருத்தம் இல்லையெனில் சிறிது காலம் கூட மகிழ்ச்சியுடன் வாழமாட்டார்கள் என்று கூறுவர்.

இரு நட்சத்திரங்களுக்கு இடையே வேதை இருந்தால் அதற்கு பொருத்தமில்லை என்று பொருள்.

வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதலை ஏற்படுத்தும் என்று பொருள். வேதைக்கு வேதனை தரும் என்ற மற்றொரு பொருளும் உண்டு

Share with friends or family